இந்தோனேசியாவின் வடக்குப் பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Thursday, 18 April 2024 - 13:23

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21+
இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலாவெசி மாகாணத்தில், ருவாங் எரிமலை வெடித்ததன் காரணமாக குறித்த பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் 11,000 ற்கும் மேற்பட்ட மக்களை இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், அந்த பகுதியில் விமானப்போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. 
 
கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்தும் எரிமலை வெடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது