வாசனை திரவியத் தொகை அதிகரிப்பு

Sunday, 27 October 2013 - 14:10

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாசனைத் திரவியங்களின் தொகை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
10வது வாசனைத் திரவிய சபையின் வருடாந்தர பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர் டேவிட் டலி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 28 ஆயிரத்து 500 தொன் வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2012ஆம் ஆண்டு 23 கோடியே 60 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான வாசனைத் திரவிய வகைகள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 55 சத வீத அதிகரிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தியாகும் வாசனைத் திரவியங்களுக்கு நல்ல வரவேற்பு ஐரோப்பிய நாடுகளில் உள்ளதனால், இலங்கை ஏற்றுமதியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.