இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு..

Sunday, 26 March 2017 - 8:33

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய ராஜ்யசபா கூட்டத் தொடரில் கலந்துகொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த கருத்தை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு அமெரிக்கா யோசனை ஒன்றை முன்வைத்தது.

இந்த யோசனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது சுஷ்மா சுவராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ்மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை இந்தியா உண்ணிப்பாக அவதானித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிறைவொன்றை காண முடியாத நிலையில் மீண்டும் ஒரு முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இந்த யோசனையை முன்வைக்கும் நிலை தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.