தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று என்ற காரணத்தினால் மகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!! கல்வியமைச்சரின் நியாயமான நடவடிக்கை..

Sunday, 26 March 2017 - 10:15

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%21%21+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..+
கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் அதனை யாராலும் எந்தவொரு மாணவருக்கும் கிடைக்கவிடாது தடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தில் மாணவி ஒருவரின் தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் அந்த மாணவியை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தமை தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தாய்க்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டதால் மாணவி ஒருவரை பாடசாலையில் இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பில் கடந்த 17 திகதி எமது செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.

குறித்த மாணவியின் தாய் தமக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளபோதும், மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படவில்லையென தெளிவுபடுத்திய போதும் மாணவியை பாடசாலையில் இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அடிப்படையற்ற காரணங்களினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த மாணவி தொடர்பில் நியாயமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.