சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்ற 6 பேரை காணவில்லை..

Sunday, 26 March 2017 - 10:47

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்ற ஆறு இலங்கை பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக செயலாளர் நலின் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சவூதிக்கு சென்ற பணியாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.